தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மிகக் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல இடங்களில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது.
மிகக் கனமழை எச்சரிக்கை
இதேபோல் இன்றும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யக்கூடும்.
கனமழைக்கு வாய்ப்பு
தலைநகர் சென்னையை பொறுத்தவரை மிதமானது முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. அதேசமயம் தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், நாகை ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளது.