ஏப்.,14 வரை இருந்த ஊரடங்கு ஏப்.,30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

ஊரடங்கு முடிய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக இன்று (ஏப்.,09) நடைபெற்ற ஒடிசா மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து முதல்வர் நவீன் பட்நாயக் கூறியுள்ளதாவது: கொரோனாவின் தாக்கம் குறையாததால் ஏப்.,14 வரை இருந்த ஊரடங்கு ஏப்.,30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒடிசாவில் ஜூன் 17 வரை அனைத்து கல்வி நிலையங்களும் தொடர்ச்சியாக மூடப்பட்டிருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.