சி.ஆர்.பி.எப்.வீரர்களுக்கு மோடி சல்யூட்

புதுடில்லி:


சி.ஆர்.பி.எப்.தினமான இன்று அப்படை வீரர்களுக்கு பிரதமர் மோடி தலைவணங்குவதாக கூறியுள்ளார். இந்த அமைப்பு உருவான ஏப்.9 ம் தேதியை நினைவுகூறும் வகையில் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டிரில் கூறியிருப்பதாவது:


இன்று சிஆர்பிஎப் வீரர்கள் தினத்தில், இந்த துணிச்சலான படைக்கு நான் தலைவணங்கி வணக்கம் செலுத்துகிறேன், 1965 ஆம் ஆண்டில் குஜராத்தின் சர்தார் படேல் முகாமில் எங்கள் சிஆர்பிஎப் பணியாளர்களின் துணிச்சலை நினைவில் கொள்கிறேன். துணிச்சலான தியாகிகளின் தியாகங்களை ஒருபோதும் மறக்க முடியாது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


இது போல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தனது வாழ்த்து செய்தியை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: ராணுவத்தின் ஒரு சிறிய குழு அவர்களை விட பல மடங்கு பெரிய படையெடுக்கும் எதிரி ராணுவத்தை தோற்கடித்து வரலாற்றை உருவாக்கியது. அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் அழியாத தைரியம், வீரம் மற்றும் தியாகத்தின் அடையாளமான சிஆர்பிஎப்புக்கு சல்யூட். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.